
நாமக்கல் மலைக்கோட்டை
ஒரே பாறையின் மேல் அமைந்த வரலாற்றுக் கோட்டை — நகரின் அடையாளம்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம்
1997 – 2027 · 30 ஆண்டுப் பெருமைப் பயணம்
1997 ஜனவரி 1 அன்று உருவான நமது நாமக்கல் மாவட்டம், வரும் 2027 ஜனவரி 1 அன்று 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாமகிரி மலைக்கோட்டை, ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், வல்வில் ஓரி ஆண்ட கொல்லிமலை என வரலாற்றுப் பெருமை மிக்க மண் இது. “Egg City”, “Transport City” என நாடு முழுவதும் அறியப்படும் நமது மாவட்டம், கல்வி, விவசாயம், ஜவுளி, தொழில் என அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து நிற்கிறது. இந்த 30 ஆண்டுப் பயணத்தை மக்களோடு இணைந்து கொண்டாட, மாவட்ட நிர்வாகம் “நாமக்கல் 30” என்ற சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது.
ஒவ்வொரு போட்டிக்கான விதிமுறைகள், பதிவு இணைப்பு மற்றும் கடைசி நாள் விவரங்கள் மாவட்ட நிர்வாக இணையதளம் namakkal.nic.in மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் வழியாகவும் பங்கேற்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், இளைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பகிரவும், பொதுமக்கள் மரக்கன்று நடுதல், தூய்மைப் பணி, நூல் கொடை, இரத்ததான முகாம் ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
“இது நம்ம ஊரு... நாமக்கல் 30!”
நன்றி. வணக்கம்.

நாமக்கல்3
நாமக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உங்கள் படைப்புகளை இந்த இணையதளம் வழியாக அனுப்பலாம்.
நாமக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, “நாமக்கல் 30” எனும் விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் மாவட்ட மக்கள் பங்கெடுக்கும் விதமாக, “நாமக்கல் 30” லோகோ வடிவமைக்க பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் பங்களிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரே பாறையின் மேல் அமைந்த வரலாற்றுக் கோட்டை — நகரின் அடையாளம்.

18 அடி உயர ஆஞ்சநேயர் — திறந்த வானின் கீழ் நின்று அருள்பாலிக்கும் சிலை.

மலையைக் குடைந்த குடைவரைக் கோயில் — நகரின் பெயருக்கே காரணமான நாமகிரி.

செங்குன்றின் மேல் அமைந்த பழம்பெரும் கோயில்.

வல்வில் ஓரி ஆண்ட மலைகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, 70 கொண்டை ஊசி வளைவுகள்.

ஜேடர்பாளையம் தடுப்பணையும் காவிரிக் கரையின் வளமான வயல்களும்.

முட்டை உற்பத்தியில் நாட்டின் முன்னணி மையம் — 'முட்டை நகரம்'.
லாரி பாடி கட்டுமானத்திலும் சரக்கு போக்குவரத்திலும் புகழ்பெற்ற மாவட்டம்.
நாமக்கல் மாவட்டத்தின் அழகையும் சிறப்பையும் உங்கள் கேமரா வழியாகக் காட்டுங்கள். கொல்லிமலையின் இயற்கை, நாமக்கல் கோட்டை, கோயில்கள், முட்டை மற்றும் லாரித் தொழில், விவசாயம், விழாக்கள், மக்களின் அன்றாட வாழ்க்கை என நாமக்கல் தொடர்பான எதுவாகவும் இருக்கலாம்.
“நாமக்கல் 30” விழாவுக்கான கருப்பொருள் இசை அல்லது பாடலை உருவாக்குங்கள். நாமக்கல்லின் பெருமை, வரலாறு, மக்களின் உழைப்பு, 30 ஆண்டு வளர்ச்சியைப் போற்றும் வகையில் இருக்கலாம். பாடலுடன் அல்லது இசை மட்டும் (instrumental) அனுப்பலாம்.
நாமக்கல் மாவட்டத்தின் 30 ஆண்டு வளர்ச்சி, மக்கள், பண்பாடு, சாதனைகள் அல்லது ஒரு உண்மைக் கதையை குறும்படமாக எடுங்கள். கைபேசியிலும் படம் எடுக்கலாம்.
கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து, உங்கள் கையால் கட்டுரை எழுதுங்கள். எழுதிய பக்கங்களை scan செய்து (அல்லது கைபேசியில் புகைப்படம் எடுத்து) ஒரே PDF கோப்பாகப் பதிவேற்றவும்.
நாமக்கல்லின் அழகு, உணவு, பண்பாடு, மக்கள், சாதனைகளை 30 விநாடி ரீல்ஸ் மூலம் காட்டுங்கள்.
எந்தப் போட்டிக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?
நாமக்கல் மாவட்டத்தின் வரலாறு, அடையாளம், பெருமைகளை உங்கள் லோகோ பிரதிபலிக்க வேண்டும். நாமக்கல் கோட்டை, ஆஞ்சநேயர் கோயில், கொல்லிமலை, முட்டை உற்பத்தி, லாரித் தொழில், கல்வி, விவசாயம் போன்ற சிறப்புகளை எளிமையாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் காட்டலாம். “நாமக்கல் 30” — மாவட்டத்தின் 30 ஆண்டு நிறைவு — தெளிவாகத் தெரிய வேண்டும். உங்கள் லோகோ எதைக் குறிக்கிறது என்பதை விளக்கப் பகுதியில் எழுதவும்.
உங்கள் பதிவு எண்
இந்த எண்ணைச் சேமித்துக் கொள்ளுங்கள் (ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும்).
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒரு கைபேசி எண்ணுக்கு ஒரு படைப்பு மட்டுமே அனுப்பலாம்.
இல்லை. நீங்கள் உள்ளிடும் பெயர், தலைப்பைக் கொண்டு Lastname_Firstname_Title என்று தானாகவே பெயரிடப்படும்.
இல்லை. எந்தப் போட்டியிலும் AI பயன்படுத்தக் கூடாது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படைப்புகள் ஏற்கப்படாது.
இல்லை. நாமக்கல் மாவட்டம் தொடர்பான எந்தப் புகைப்படமும் அனுப்பலாம். ஓவியம் / காட்சிப் பலகை ஏற்கப்படாது.
ஆம், 15 MB வரை. பதிவேற்றம் முடியும் வரை பக்கத்தை மூட வேண்டாம்.
ஆம். பாடலுடன் அல்லது இசை மட்டும் — இரண்டும் ஏற்கப்படும்.
ஆம். குறைந்தது 720p தரத்தில், கிடைமட்டமாக (landscape) எடுக்கவும். 300 MB வரை பதிவேற்றலாம்; பதிவேற்றம் முடியும் வரை பக்கத்தை மூட வேண்டாம்.
இல்லை. கையால் எழுதி, பக்கங்களை scan செய்து ஒரே PDF ஆகப் பதிவேற்றவும். கைபேசியில் CamScanner, Google Drive Scan, Adobe Scan போன்ற செயலிகள் மூலம் PDF ஆக மாற்றலாம்.
இல்லை. அசல் வீடியோ கோப்பை (MP4 / MOV) பதிவேற்றவும்.
இல்லை. தேர்வு செய்யப்பட்டால் மட்டும் பின்னர் கேட்கப்படும்.
லோகோ 15 × 20 செ.மீ அளவில் 300 DPI-இல் இருக்க வேண்டும். உங்கள் வடிவமைப்பு மென்பொருளில் அந்த அளவில் export செய்யவும் அல்லது PDF ஆக சேமிக்கவும்.
இல்லை. ஒரே கைபேசி எண்ணில் மீண்டும் சமர்ப்பிக்க இயலாது. சமர்ப்பிக்கும் முன் அனைத்தையும் சரிபார்க்கவும்.